என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மன்மோகன் சிங்"
- மன்மோகன் சிங் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திக்கிறேன்.
- உங்களின் தன்னலமற்ற சேவை, பகுத்தறிவு மற்றும் பணிவு எனக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் 92-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Birthday greetings to former PM Dr. Manmohan Singh Ji. I pray that he is blessed with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) September 26, 2024
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Happy Birthday to Dr. Manmohan Singh Ji. Your humility, wisdom, and selfless service in shaping our country's future continue to inspire me and millions of Indians. Wishing you good health and happiness always!
— Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2024
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உங்களின் தன்னலமற்ற சேவை, பகுத்தறிவு மற்றும் பணிவு எனக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- இந்திய பொருளாதாரத்தை கட்டமைத்ததில் மன்மோகன் சிங்கின் சேவை என்றும் நினைவுகூரத்தக்கது.
சென்னை:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்திய பொருளாதாரத்தை கட்டமைத்ததில் மன்மோகன் சிங்கின் சேவை என்றும் நினைவுகூரத்தக்கது.
மன்மோகன் சிங்கின் ஞானம் மற்றும் அர்ப்பணிப்பு அடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
Wishing former Prime Minister Dr. Manmohan Singh a very happy birthday! His visionary leadership and invaluable service in shaping India's economic landscape will forever be remembered. May he continue to inspire generations with his wisdom and dedication.
— M.K.Stalin (@mkstalin) September 26, 2024
- பிரதமர் மோடியை குறிவைத்து எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக பாஜக குற்றச்சாட்டு.
- இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி. பாலிகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கணபதி பூஜை நடத்தினார். இந்த பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார். தலைமை நீதிபதி இல்ல பூஜையில், பிரதமர் மோடி கலந்து கொண்டு எதிர்கட்சிகளை கேள்வி எழுப்ப செய்தது.
இந்த விவகாரத்தில் எதிர்கட்சியினர் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களையும், ஏராளமான கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டில் நடந்த கணபதி பூஜையில் கலந்து கொண்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் இப்தார் விருந்து அளித்த போது எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தனது இல்லத்தில் நடத்திய இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி. பாலிகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் ஷெஹ்சாத் பூனவாலா, "2009- பிரதமர் மன்மோகன் சிங்கின் இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். தற்போதைய தலைமை நீதிபதி இல்லத்தில் விநாயகர் பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் - கடவுளே நீதித்துறை சமரசம் செய்யப்பட்டது," என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் 2009 ஆம் ஆண்டு இப்தார் விருந்து வழங்கியது போன்ற பழைய படத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா பகிர்ந்துள்ளார். இதில் அப்போதைய இந்திய தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.
இதோடு மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பல பிரமுகர்களை வரவேற்பதைக் காட்டும் இந்தியா டுடே ஆவணக் காப்பகங்களில் இருந்து பல புகைப்படங்களைப் ஷெஹ்சாத் பூனவல்லா பகிர்ந்துள்ளார்.
- காங்கிரஸ் கட்சியால் மட்டுமே வளர்ச்சி அடிப்படையிலான முற்போக்கான எதிர்காலத்தை அளிக்க முடியும்.
- மனிதத்தன்மையற்ற பேச்சுகள் உச்சத்தை எட்டி விட்டன.
புதுடெல்லி:
57 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அவற்றில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 பாராளுமன்ற தொகுதிகளும் அடங்கும்.
அதையொட்டி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
''நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது'' என்று பிரதமராக இருந்தபோது மன்மோகன்சிங் பேசியதாக பிரதமர் மோடி கூறியதற்கும் பதில் அளித்துள்ளார்.
மன்மோகன்சிங் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே வளர்ச்சி அடிப்படையிலான முற்போக்கான எதிர்காலத்தை அளிக்க முடியும். அதில், ஜனநாயகமும், அரசியலமைப்பு சட்டமும் பாதுகாக்கப்படும்.
ராணுவம் மீது 'அக்னிவீர்' என்ற மோசமான திட்டத்தை மோடி அரசு திணித்துள்ளது. தேசபக்தி, வீரம், சேவை ஆகியவற்றின் மதிப்பு 4 ஆண்டுகளுக்குத்தான் என்று பா.ஜனதா நினைக்கிறது. இது, அவர்களின் போலி தேசியவாதத்தை காட்டுகிறது.
நான் தேர்தல் பிரசாரத்தில் தலைவர்களின் பொதுக்கூட்ட பேச்சுகளை ஆர்வமாக கவனித்து வருகிறேன். பிரதமர் மோடி, வெறுப்பு பேச்சுகளிலேயே மிகவும் கொடிய வகையை பின்பற்றி வருகிறார். அப்பேச்சுகள் முற்றிலும் பிளவு மனப்பான்மையுடன் உள்ளன.
பொதுக்கூட்ட பேச்சின் கண்ணியத்தை குறைத்த முதலாவது பிரதமர் மோடியே ஆவார். பிரதமர் பதவியின் ஈர்ப்புத்தன்மையையும் அவர் குறைத்து விட்டார்.
கடந்த காலத்தில் இருந்த எந்த பிரதமரும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ, எதிர்க்கட்சிகளையோ குறிவைத்து இத்தகைய வெறுப்புணர்வு கொண்ட, பாராளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை பயன்படுத்தியது இல்லை.
மேலும், நான் சொன்னதாக அவர் சில பொய்யான கருத்துகளை தெரிவித்துள்ளார். என் வாழ்க்கையில் நான் ஒரு சமுதாயத்தை மற்ற சமுதாயங்களிடம் இருந்து பாகுபடுத்தியது இல்லை. அதற்கு காப்புரிமை பெற்ற ஒரே கட்சி, பா.ஜனதாதான்.
நாட்டு மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதத்தன்மையற்ற பேச்சுகள் உச்சத்தை எட்டி விட்டன. இந்த பிளவு சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவது நமது கடமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் பிரசார உரைகளை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
- பிரசாரம் முழுவதும் அவர் வெறுப்பு பேச்சை பேசி வருகிறார். குறிப்பிட்ட சமுதாயத்தினரை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்.
மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி கோவில்- மசூதி, இந்து-முஸ்லிம் என பேசி வருகிறார். ஒரு சமுதாயத்தினருக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார். வெறுப்பு அரசியலை வெளிப்படுத்துகிறார் என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-
இந்த தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் பிரசார உரைகளை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். தேர்தல் பிரசாரத்தின்போது வெறுக்கத்தக்க உரைகளை வழங்கியதன் மூலம், பொது உரையின் (பிராசரம், பேச்சுகள்) கண்ணியத்தையும், பிரதமர் அலுவலகத்தின் மீதான ஈர்ப்பையும் மோடி குறைக்கிறார்.
பிரசாரம் முழுவதும் அவர் வெறுப்பு பேச்சை பேசி வருகிறார். குறிப்பிட்ட சமுதாயத்தினரை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அவரின் பிரசாரம் மக்களை பிளவுபடுத்தும் வகையில் உள்ளது. இதற்கு முன் எந்த பிரதமரும் இப்படி வெறுப்பு பேச்சையோ, கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்படுத்தவில்லை.
தேசபக்தி, வீரம் மற்றும் சேவையின் மதிப்பு நான்கு ஆண்டுகள் (அக்னிவீர் திட்டம்) மட்டுமே என பாஜக நினைக்கிறது. இது அவர்களின் போலி தேசியவாதத்தை காட்டுகிறது.
கடந்த காலத்தில் எந்தவொரு பிரதமரும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில், இதுபோன்ற வெறுப்பூட்டும், பாராளுமன்றத்திற்கு விரோதமான வார்த்தைகளை கூறியதில்லை. அவர் என்னிடம் சில பொய்யான அறிக்கைகளையும் கூறியிருக்கிறார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்திலிருந்து மற்ற சமூகத்தை தனித்து காட்டியதில்லை. அது பாஜக-வுக்கு மட்டுமே உரித்தானவை.
இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
- நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
- இந்நிலையில் டெல்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை டெல்லி தேர்தல் ஆணையம் செய்துகொடுத்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் மே 20 திங்கட்கிழமை அன்று உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் என அதிக வாக்காளர்கள் உள்ள மாநிலங்களில் உள்ள தொகுதிகள் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவில் பங்கேற்க உள்ளன. அதைத்தொடர்ந்து மே 25 ஆம் தேதி நடக்கும் 6 ஆம் கட்ட வாக்குபதிவு நாளன்று டெல்லிக்கு ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்து முடியும்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை டெல்லி தேர்தல் ஆணையம் செய்துகொடுத்துள்ளது. நேற்று இந்த வசதி மூலம் மொத்தம் 1409 பேர் வாக்களித்த நிலையில் இன்று வடக்கு டெல்லி உட்பட பல்வேறு தொகுதிகளில் மொத்தம் 2956 பேர் வாக்களித்தனர்.
அதன்படி டெல்லியில் வசித்து வரும் பல்வேறு காட்சிகளைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் இன்று (மே 18) வாக்களித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமரும் மன்மோகன் சிங் நேற்று தனது வீட்டில் இருந்தபடியே தனதுஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
முன்னாள் உள்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் முகமத் ஹமீத் அன்சாரி ஆகியோரும் நேற்றைய தினம் வாக்களித்தாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பாஜகவை மூத்த தலைவர் எல்.கே அத்வானி இன்று தனது இல்லத்தில் இருந்தபடியே வாக்களித்தார்.
- காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
- பா.ஜனதா தலைவர்கள் மன்மோகன்சிங்கின் பேச்சை மேற்கோள் காட்டி நியாயப்படுத்தி வருகிறார்கள்.
ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டின் சொத்துகளில் (வளங்கள்) முஸ்லிம்களுக்கே முதல் உரிமை என காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் காங்கிரஸ் அரசு தெரிவித்திருந்தது" என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசினார்.
2006 தேசிய வளர்ச்சி மாநாட்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக பா.ஜனதா வீடியோவும் வெளியிட்டிருந்தது.
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேவேளையில் பா.ஜனதா தலைவர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடியின் பேச்சை நியாயப்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி, 2006-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், "நாட்டின் வேகமான வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, விவசாயம், வேலை வாய்ப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சி" உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.
அப்போது, "நமது முன்னுரிமைகள் தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன். விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் நீர் ஆதாரங்கள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற உள்கட்டமைப்பில் முக்கியமான முதலீடு மற்றும் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றோடு, பட்டியலினத்தோர், பிற பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்கான திட்டங்களுடன் தான் நமது முன்னுரிமை.
பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள் புத்துயிர் பெற வேண்டும். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர், வளர்ச்சியின் பலன்களை சமமாகப் பெறுவதை உறுதிசெய்ய, திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். நமது வளங்கள் மீதான முதல் உரிமை இவற்றிற்கானது தான்." என்று குறிப்பிட்டார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்த கருத்துக்கு அப்போதைய எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கிய பிறகு பிரதமர் அலுவலகம் விளக்கம் கொடுத்தது.
அதில், "வளங்கள் மீதான முன்னுரிமை" குறித்த பிரதமரின் பேச்சு வேண்டுமென்றே தவறாக பரப்பப்பட்டதின் காரணமாக சர்ச்சை உருவாகியுள்ளது. பிரதமரின் பேச்சினை சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பது இந்த சர்ச்சையை தூண்டியுள்ளது. பட்டியலினத்தோர், பிற பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் போன்ற அனைவரின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை தான் இது குறிக்கிறது.
சமீப மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவதை அடிப்படையாக கொண்டே பிரதமர் இந்த அறிவிப்புகளை மேற்கொண்டார். பெரும்பான்மை மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தினாலும், நலிவடைந்த மற்றும் சிறுபான்மை பிரிவினரின் நலனில் சிறப்பு கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். "இந்தியா பிரகாசிக்க வேண்டும், ஆனால் அது அனைவருக்குமே பிரகாசிக்க வேண்டும்" என்று பிரதமர் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்".
"வளங்கள் மீதான முதல் உரிமைகோரல்" என்ற பிரதமரின் குறிப்பு, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரின் மேம்பாடு உள்பட மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து "முன்னுரிமை" பகுதிகளையும் குறிக்கிறது என்பதை மேற்கூறியவற்றிலிருந்து பார்க்க முடியும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- தங்களது பதவிக்காலம் முழுவதும், தன்னடக்கம் அறிவாற்றல் உயர் அரசியல் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, கட்சி வேறுபாடின்றி அனைவரது நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளீர்கள்.
- உங்களது தலைமைத்துவம், குறிப்பாகக் கடினமான காலங்களில் நீங்கள் அதை வெளிப்படுத்திய விதம், என்னை உட்படப் பலருக்கும் ஊக்கமாக இருந்துள்ளது.
சென்னை:
தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,
மாநிலங்களவையில் 33 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து தாங்கள் நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைக்காகத் தி.மு.க.வின் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது பதவிக்காலம் முழுவதும், தன்னடக்கம் அறிவாற்றல் உயர் அரசியல் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, கட்சி வேறுபாடின்றி அனைவரது நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளீர்கள். உங்களது தலைமைத்துவம், குறிப்பாகக் கடினமான காலங்களில் நீங்கள் அதை வெளிப்படுத்திய விதம், என்னை உட்படப் பலருக்கும் ஊக்கமாக இருந்துள்ளது.
வாழ்வில் புதிய கட்டத்தை நோக்கித் தாங்கள் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், இந்திய ஒன்றியத்துக்கும் இந்திய மக்களுக்கும் நீங்கள் ஆற்றிய பெருந்தொண்டினை எண்ணிப் பெருமை கொள்வீர்கள் என நம்புகிறேன்.
தி.மு.கழகம் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் தாங்கள் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் திகழவும், அடுத்து தாங்கள் மேற்கொள்ளும் பணிகளில் மனநிறைவெய்தவும் விழைகிறேன். தங்களது அறிவாற்றலாலும், தொலைநோக்குப் பார்வையாலும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிப்பீராக.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
- 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளனர்.
- முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாராளுமன்றம் செல்லவிருக்கிறார்.
1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்ம ராவ் ஆட்சியின் போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாளையுடன் ஓய்வு பெறுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த 1991 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றார். இந்த நிலையில் அவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.
மன்மோகன் சிங் ஓய்வை தொடர்ந்து மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பதவியேற்கிறார். அந்த வகையில், சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாராளுமன்றம் செல்லவிருக்கிறார். மன்மோகன் சிங் தவிர 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளனர்.
- மன்மோகன் சிங் ஆறு முறை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
- இரண்டு முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை எம்.பி.க்களில் 68 பேரின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையில் முடிவடைகிறது. இதையொட்டி அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பேசினார்.
அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை வெகுவாக பாராட்டினார். அப்போது "மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு வாக்கு அளிக்க மாநிலங்களவைக்கு வந்து, ஜனநாயகததின் வலிமைக்கு உதவியாக இருந்தார். மன்மோகன் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. நீண்ட காலம் இந்த அவையையும் நாட்டையும் அவர் வழி நடத்திய விதம் மறக்க முடியாது. அவர் நம்மை தொடர்ந்து வழி நடத்த வேண்டிக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தை வலுப்படுத்தியவர். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். தனது கடமைகளை சிறப்புற நிறைவேற்றியர். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு என்றும் நினைவு கூரத்தக்கது." என்றார்.
மன்மோகன் சிங் 2014 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் இந்திய பிரதமாக இருந்தார். ஆறுமுறை மாநிலங்களை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய பிரதமர்கள் கடைசியாக செய்தியாளர்களை சந்தித்து 10 வருடம் ஆனதாக தகவல்
- பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திக்காதது ஏன் என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இது காங்கிரஸ்-க்கு பெரிய அடியாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில்இந்திய பிரதமர்கள் கடைசியாக செய்தியாளர்களை சந்தித்து 10 வருடம் ஆனதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் தகவல் தொடர்பு ஆலோசகர் பன்கஜ் பக்சோரி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் "இந்தியப் பிரதமர் கடைசியாக செய்தியாளர்களை சந்தித்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன. 2012ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி, 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுடன், 62 திட்டமிடப்படாத கேள்விகளுக்கு அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பதிலளித்திருந்ததாக பதிவிட்டிருந்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்க் பதில் அளித்தும், அவர் அமைதி காத்ததாக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்திருந்தன.
இந்நிலையில் பாஜக பதவியேற்று 10 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தியாவில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திக்காதது தற்போது பேசு பொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்திருந்தார்.
உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்களும் உங்கள் அரசும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீர்கள்?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சாதி, மத அடிப்படையில், இந்தியாவின் ஜனநாயக கொள்கையில் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை என பதிலளித்திருந்தார் மோடி. அரசை விமர்சிப்பவர்களை வாய் திறக்காமல் செய்வதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிப்பதாக கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. இச்சம்பவம் அப்போது பேசுபொருளாகி விவாதத்தை ஏற்படுத்தியது.
உலக நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது செய்தியாளர்களை சந்திப்பது உண்டு. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 117 முறை செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திக்காதது ஏன் என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
- முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூறப்படுவார்.
- இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, பிரதமராக அவரது தலைமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு இந்தியாவின் எதிர்காலத்தை மறுவடிவமைத்தது.
அவரது ஆர்ப்பாட்டமில்லாத, அறிவார்ந்த மற்றும் பணிவான அணுகுமுறை எக்காலத்திலும் தலைமைத்துவத்திற்கு மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூறப்படுவார். இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்!
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்